
கோட்டக்குப்பத்தில் 7 ஓட்டுச் சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. கோட்டக்குப்பம் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் பானுமதி தலைமையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 27 வார்டுகளில், 7 வார்டுகளில் உள்ள ஓட்டு மையங்கள் பதற்றம் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. சின்ன முதலியார்சாவடிகுப்பம் வார்டு-4, தந்திராயன்குப்பம் அங்கன்வாடி மையம் வார்டு-7, இந்திரா நகர் வார்டு-8, நடுக்குப்பம் வார்டு-9, கோட்டக்குப்பம் காலனி வார்டு-10 உள்ளிட்ட ஏழு ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமான பகுதிகள்.இப்பகுதியில் ஓட்டுப்பதிவு நாளன்று, சி.சி.டி.வி., கேமரா பொருத்தவும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.