
கோட்டகுப்பம் நகராட்சி வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் ஆய்வு செய்தார்.ஆய்வில் ஓட்டு எண்ணும் மையங்களில் நடந்து கொள்ளும் வழிமுறை குறித்தும் அறைகள் பிரிப்பது தடுப்பு கட்டை அமைப்பது கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் கொரோனா நெறிமுறைகள் தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தாசில்தார்கள் சரவணன், உமாமகேசுவரன், கோட்டகுப்பம் நகராட்சி கமிஷனர் பானுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.