நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 27 உறுப்பினர்கள் (கவுன்சிலர் ) தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள்.

சிலரின் புகைப்படங்கள்
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் கடைசிநாளான இன்று வரை மொத்தம் 161 பேர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அதிகபட்சமாக வார்டு 12 & 16 யில் 10 பேரும், குறைந்த பட்சமாக வார்டு 10, 13 & 14 லில் 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.
கட்சிவாரியாக அதன் விபரங்கள் வருமாறு,
- சுயேட்சைகள் 76
- திமுக 27
- அஇஅதிமுக 22
- காங்கிரஸ் 2
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1
- முஸ்லீம் லீக் 1
- தேமுகிக 1
- பாமக 6
- மக்கள் நீதி மையம் 4
- நாம் தமிழர் 5
- விஜய் மக்கள் இயக்கம் 2
- SDPI 2
- அமுமுக 4
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 7ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மார்ச் 4ஆம் தேதி நகராட்சித்தலைவர், துணை தலைவர் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டகுப்பதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வித்தியாசமாக திமுக- சுயேட்ச்சை இடையேதான நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள முக்கிய விஐபிக்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது, விஐபிக்களை சந்திப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாளில் வீடு, வீடாக பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதனால் இப்போதே தேர்தல் களத்தில் அனல் வீசத் தொடங்கியுள்ளது.