தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

A. அஹமத் அலி அவர்கள் வேட்புமனு
தாக்கல் செய்தார்
இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

A. முஹம்மது யூனுஸ் அவர்கள் வேட்புமனு
தாக்கல் செய்தார்
இந்த நிலையில் புதிதாக நகராட்சி என தரம் உயர்த்தப்பட கோட்டகுப்பதில் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. திமுக, சுயேட்சைகள், விஜய் மக்கள் இயக்கம், பிஜேபி போன்ற கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் முதல் முறையாக SDPI கட்சி இந்த தேர்தலில் 16 மற்றும் 17 வது வார்டுகளில் முறையே A. முஹம்மது யூனூஸ் , A அஹமத் அலி வேட்புமனு தாக்கல் செய்தனர்.