கோட்டக்குப்பம் நகராட்சியில் அ.தி.மு.க., சார்பில் சில வார்டுகளில் போட்டியிட நிர்வாகிகள் முன்வராததால் கட்சி மேலிடம் அதிருப்தியில் உள்ளது.கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறது.

அதனால், தி.மு.க., – அ.தி.மு.க., கட்சி மேலிடம் முதல் நகராட்சி சேர்மன் பதவியை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தி.மு.க., கூட்டணி சார்பில் 27 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க., தலைமை 27 வார்டுகளிலும் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தியது.அதில் முஸ்லிம் நிறைந்த பகுதியான 5க்கும் மேற்பட்ட வார்டுகளில் போட்டியிட அ.தி.மு.க., நிர்வாகிகள் முன்வராததால் கட்சி மேலிடம் அதிருப்தியில் உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் சுயேச்சையாக வேட்பாளர்களை நிறுத்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் நகராட்சி சேர்மன் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.