

கோட்டகுப்பதில் முதல் முறையாக விஜய் மக்கள் இயக்கத்தினர் 2 பேர் வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கு நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
நடிகர் விஜயின் பெயர் மற்றும் கொடிகளை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோட்டக்குப்பம் மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 21 வது வார்டில் மு சைதானி, மற்றும் 22 வது வார்டில் முஹம்மத் தமீம் அன்சாரி ஆகிய இருவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.
இளைஞர்கள் ஆதரவு அதிகமிருக்கும் விஜய் மக்கள் இயக்கம் கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவதால், இந்த இரண்டு வார்டில் போட்டியிடும் பிற வேட்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்ப்பு..!