
கோட்டக்குப்பம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள் .
கோட்டக்குப்பம் நகர்புறத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளை பகிர்கிறோம்,மக்கள் நீங்களும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை பற்றி கூறலாம்.
- நகரபகுதியில் தெருவிளக்குகள் பல பகுதிகளில் ஏறியவில்லை அதை முழுவதுமாக சரி செய்ய வேண்டும் அதே போன்று பல பகுதிகளில் இன்னும் தெரு விளக்கு இல்லாமல் உள்ளது அங்கே தெரு விளக்கு அமைக்க வேண்டும்
- குப்பைகளை அனைத்து வீடுகளிலும் சரியான முறையில் வாங்க வேண்டும் நகரத்தில் உள்ள பல பகுதிகளில் இந்த பிரச்சனை உள்ளது
- நகரத்தின் முக்கிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது, வனத்துறையை வைத்து பிடித்து காட்டில் விட வேண்டும்.
- தூய்மை பணியாளர் வீடுகளில் வாங்கும் குப்பைகளில் உள்ள பேப்பர், கவர்களை சாலையிலே ஏறிக்கவும் செய்கிறார்கள்.
5.நகரத்தில் பல பகுதிகளில் நாய்கள், ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளால் தொல்லைகள் அதிகமாக உள்ளது.
6. கோட்டக்குப்பம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் எடுத்து வர வேண்டும்.
7.நகராட்சி சார்பாக கட்டபட்ட கழிவுநீர் கழிப்பிடம் சில பகுதிகளில் செயல்படாமல் உள்ளது.
8. பெரிய முதலியார் சாவடி நகராட்சி பூங்காவை சீரமைத்து தர வேண்டும்.
9.நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி குடிநீர் குழுாய்கள் மாற்றி அமைக்க வேண்டும்.
10. கோட்டகுப்பதில் துணை மின் நிலையம் அமைக்க அரசு புறம்போக்கு இடம் தேர்தெடுத்து அரசுக்கு கொடுக்கவேண்டும்.
11. பேருந்து நிழல் குடை அமைக்க வேண்டும்.
12. சுகாதார நிலையத்தை பெரிதாக அமைத்து மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
13. பல ஆண்டுகளுக்கு முன்பு போட பட்ட பழைய சிமெண்ட் சாலைகளை பெயர்த்தெடுத்து பழைய உயரத்தில் புதிய ரோடு அமைக்க வேண்டும்.
14. செயல்படாமல் இருக்கும் மேல் நிலை குடி நீர் தொட்டியை பயன்பாட்டுக்கு எடுத்து வர வேண்டும்
15. பிறப்பு இறப்பு போன்ற பதிவுகள் இணையதளத்தின் வாயிலாக கிடைக்க கோட்டக்குப்பம் நகராட்சி இணையத்தளத்தை மேம்படுத்தவேண்டும்.
16. மக்கள் புகார்களை எளியமுறையில் புகார் அளிக்க whatsapp no ஒன்றை உருவாக்க வேண்டும்
பொது மக்கள் உங்களின் பிரச்சனைகளை பட்டியலிடுங்கள் .. வெற்றி பெறும் வேட்பாளர்கள் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.