
கோட்டக்குப்பம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறை தேர்தலை சந்திக்கிறது.புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த பகுதியில் மீனவ கிராமங்கள் உள்ளதால் மீன் பிடி தொழில் அதிகளவு நடைபெரும்.கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு 6 கோடி வரை வருமானம் வரக்கூடிய பகுதியாக உள்ளது.
தி.மு.க., – அ.தி.மு.க., தலா 2 முறையும், ஒரு முறை சுயேச்சையும் தலைவர் பதவியை பிடித்துள்ளனர்.இன்னிலையில் கடந்த ஆண்டு கோட்டக்குப்பம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியில் பெரியமுதலியார் சாவடி, சின்ன முதலியார்சாவடி, தந்திராயன்குப்பம், கோட்டக்குப்பம், சின்ன கோட்டக்குப்பம், கோட்டைமேடு, நடுக்குப்பம், சோதனைக்குப்பம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இங்கு, ஆண் வாக்காளர் 11,581, பெண் வாக்காளர் 12,090, மூன்றாம் பாலினத்தவர் 2 என மொத்தம் 23,673 வாக்காளர்கள் உள்ளனர். 27 வார்டுகளில் பொது வார்டு 12, பெண்கள் பொது வார்டு 12, தனி பெண்கள் வார்டு 2, ஒரு தனி பொது வார்டு, சேர்மன் பொது என்ற நிலையில் கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலை சந்திக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க., – சுயேச்சை.,னரிடையே கடும் போட்டி நிலைவி வருகிறது. மேலும் நகராட்சியின் முதல் சேர்மன் பதவியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே வாக்காளர்களை சந்திக்கத் துவங்கி விட்டனர்.
News : Dinamalar