




கோட்டக்குப்பதில் பிரதான சாலைகள் உட்பட பல இடங்களில் வீட்டு விளக்குகளால் மட்டுமே தெருக்கள் வெளிச்சம் பெறும் நிலை இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் வீடுகளில் எரியும் மின் விளக்கின் வெளிச்சத்தை பெற்று இத்தெருக்கள் பிரகாசம் அடைகிறது. இரவு 9 மணிக்கு பிறகு அனைவரும் உறங்க செல்லும்போது, வீட்டு விளக்கை அணைக்கும் நேரத்தில் தெருக்களில் இருள் சூழ்ந்து விடுகிறது.
கோட்டக்குப்பம் நகராட்சி அனைத்து தெருக்களிலும் மின் விளக்குகள் இருக்கிறது. ஆனால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தெருவிளக்குகள் இருந்தும், வெளிச்சம் பெறாத தெருக்களாக கோட்டக்குப்பம் தெருக்கள் இருந்து வருகின்றன.
கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் தெரு, பழைய பட்டின பாதை, பஜார் தெருவில் பராமரிப்பு இல்லாத காரணத்தால் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து நிறைந்த இந்த இடம் இருள் சூழ்ந்து கிடக்கிறது.
கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள பகுதிகளில் உயர்மட்ட மின் கோபுர விளக்குகள், சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள், சாலையோர தெரு விளக்கு கம்பங்கள் என பல்வேறு வகையான தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருக்கிறது. இவற்றை பராமரிப்பதில் மின்சார பல்புகளை மாற்றுவதில், மின் சாதனப் பெட்டிகளை சீரமைப்பதில்நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல இங்கே சில தெருக்களின் படங்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து அணைத்து தெருக்களில் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி கவுன்சிலர் ஆக ஆசைப்படும் வேட்பாளர்களே..உங்கள் வார்டுகளில் இருக்கும் குறைந்த பட்ச இது போல் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் எடுத்து சென்று தீர்வு காணுங்கள்..மக்கள் உங்கள் சேவையை பார்த்து தேர்தலில் வாக்களிப்பார்கள்.