
கோட்டக்குப்பம் நகராட்சியில் அரசு கிளை நூலகம் கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வருட தோறும் தகுந்த பராமரிப்பு செய்யாததால் நூலக கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. கான்கிரீட் பூச்சு பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது.
இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்யும் போது நூலக கட்டிடத்தில் மழைநீர் புகுகிறது. அதனால் நூல்கள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. எனவே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு தலைவர் நா சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நூலகத்தை பார்வையிட்ட பின் நகராட்சி ஆணையர் திருமதி பானுமதி அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார்.