
தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் வாகன போக்குவரத்தை தடுக்க தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் நடந்த வண்ணமே வந்து மீன், இறைச்சி, காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி – தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் இரு மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு இல்லை. இருப்பினும் புதுச்சேரி- தமிழக போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 3வது வாரமாக ஞாயிறுகிழமையான இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு இல்லை இதனால் புதுச்சேரி-தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் இரு மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி – கோட்டக்குப்பம் எல்லையில் இரு மாநில போலீசாரும் வாகனங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். இதில் தமிழக பகுதிகளுக்கு எந்த வாகனத்தையும் தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. இதேபோல புதுச்சேரியில் எந்த தடையும் இல்லாத காரணத்தால் வெளி மாநில மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.முழு ஊரடங்கு காரணமாகவும் புதுச்சேரியில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது காரணமாகவும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் புதுச்சேரி- தமிழ் எல்லைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதே வேளையில் தமிழக-புதுச்சேரி எல்லைகளில் வித்தியாசமான காட்சிகள் காணப்படுகின்றன. இரு எல்லைகளிலும் ஒருபுறம் சகஜமான வாழ்க்கையில் மக்கள் இருப்பதும் மறுபுறம் இயல்பு வாழ்வில் பாதிப்பும் காணப்படுகிறது.
தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் வாகன போக்குவரத்தை தடுக்க தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் நடந்த வண்ணமே வந்து மீன், இறைச்சி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மதுவை வாங்கி செல்கின்றனர்.
புதுச்சேரிக்குள் பல தமிழக பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் முழு ஊரடங்கு இருந்தாலும் புதுச்சேரியில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கும் சென்ற வியாபாரம் செய்பவர்களும் வேலை செய்பவர்களும் முழு ஊரடங்கால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க மக்கள் கோருகின்றனர்.