
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் சுயேட்ச்சைகள் அதிகம் பேர் களம் இறங்க முடிவு செய்து, அவர்கள் தேர்தல் பணியை பல பகுதிகளில் தொடங்கவிட்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நிர்வாகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பல நேரங்களில் பல அரசியல் கட்சிகள் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்து வந்தனர். இந்நிலையில் அடுத்த வாரத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அந்தெந்த பகுதி கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முக்கிய கட்சிகளை தாண்டியும் சுயேட்ச்சைகள் அதிகள் பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். சிலர் முடிவு செய்தது மட்டுமில்லாமல் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நகராட்சி கவுன்சிலர், பதவிகளுக்கு சுயேட்ச்சைகள் அதிகம் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் குறைந்த வாக்குகள் மட்டுமே இருப்பதால் வாக்காளர்களை எளிதில் சந்திப்பது, அனைத்து வாக்காளர்கள் எளிதில் பழக்கப்பட்டவர்கள் என்பதால் கட்சியின்றி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று நம்பிக்கையில் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போட்டியாளர்கள் தற்போதே வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.