
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு தமிழக அரசு சாா்பில் கரோனா இழப்பீட்டுத் தொகை ரூ.50,000 வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு இதுவரை 850 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 515 பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 44 பேரின் விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவையாக இருப்பதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 விண்ணப்பங்களுக்கு சட்ட ரீதியான காரணங்களால் இழப்பீடு வழங்க இயலாத நிலை உள்ளது. எஞ்சிய விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது.
ஆகவே, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு கோரி இதுவரை விண்ணப்பிக்காத வாரிசுதாரா்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.