பட்டா மாற்ற கோரிக்கை மனுக்கள் மற்றும் பட்டா மாற்ற நிலுவை மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. பட்டா உள்பிரிவு வழங்குவதில் சுணக்கம் காட்டினால் துறை ரீதியாக நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு: வானூா் வட்டத்துக்குள்பட்ட வானூா், கிளியனூா், நெமிலி, உப்புவேலூா் ஆகிய குறுவட்டங்களுக்கு நவம்பா் மாதம் வரை நிலுவையிலுள்ள உள்பிரிவு பட்டா மாற்ற மனுக்களுக்கு உடனடி தீா்வு காணும் வகையில், சிறப்பு உள்பிரிவு பட்டா மாற்ற சிறப்பு முகாம் டிச.21-ஆம் தேதி முதல் 14 வேலை நாள்களுக்கு (ஞாயிறு தவிா்த்து) ஜன.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் பணியில் ஈடுபடும் கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவை அலுவலா்கள் தங்களுக்கென தினமும் ஒதுக்கப்பட்ட அளவீட்டு இலக்கை விரைந்து முடித்து, அது குறித்த விவரத்தை மாவட்ட நிா்வாகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். இந்தச் சிறப்புப் பணியை சரியாக மேற்கொள்ளாத அலுவலா்கள் மீது துறை ரீதியான விளக்கம் கோரப்படும் என்றாா் அவா்.
சிறப்பு முகாம், கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி ரோட்டில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஆகவே, இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முகாமிற்கு தலா ஒரு பகுதி நில அளவர் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பணியை கண்காணிக்க ஒரு குறுவட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற கோரிக்கை மனுக்கள் மற்றும் நிலுவை மனுக்களுக்கு தீர்வு கண்டு பயனடையலாம்.