
கோட்டக்குப்பம் பேரூராட்சி மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தில் 18 வார்டுகளாக இருந்தது, மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 27 வார்டுவரை மீண்டும் வார்டு மறுவரையறை செய்யப்படவுள்ளது. வார்டு அதிகரிப்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், பாரம்பரிய வார்டுகளை பிரித்து வேறு சில வார்டுகளில் இணைக்கும் சாத்தியமுள்ளது. பொதுமக்கள் அரசியல்கட்சிகள் தன்னார்வலர்கள் விழுப்புடன் இருந்து வார்டு மறுவரையறை சுமுகமாக பிரிக்க ஆவண செய்யவேண்டும்.
கோட்டக்குப்பம் நகராட்சி உத்தேச வார்டு பட்டியல் மீது கருத்துக்கணிப்பு கூட்டம் 24 டிசம்பர் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற இருக்கிறது.