கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாக சபைக்கு தேர்தல் வரும் டிசம்பர் 26 அன்று நடைபெறுவதாக இருந்தது. பரபரப்பாக வேட்புமனு தாக்கல் முடிந்து, இன்று வாபஸ் செய்ய கடைசி நாளில், போட்டியில் இருந்த 47 பேர்களில் 4 பேர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 19 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றதையடுத்து மீதம் இருந்த 24 வேட்பாளர்களும் போட்டியின்றி வக்ப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விரைவில் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்தெடுப்பார்கள்.
