

கோட்டக்குப்பம் பள்ளிவாசல் தெருவில் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றியுள்ள பகுதிகள் சீர் செய்யாமலே மணல் குவிந்திருப்பதால், தொழுகைக்கு வருபவர்களும், திருமண மண்டபத்துக்கு வரும் மக்களும் பெரிதும் சிரமப்பட்டனர்.
இது குறித்து செய்தியை படத்துடன் கோட்டக்குப்பம்_செய்திகள் இணையதளத்தில் செய்தியாக பகிர்ந்திருந்தோம்.
உடனே சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் திரு.M.சுகுமார் உடனடியாக களத்தில் இறங்கி இடத்தை சுத்தம் பண்ணி கொடுத்துள்ளார்.
மக்களுக்கு பயனுள்ளவகையில், பெரும் மழையை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்த திரு. M. சுகுமார் அவர்களுக்கு நன்றி