

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜிதின் நிர்வாகிகள் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.

ஹை கோர்ட் ஆணைக்கிணங்க 24 நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்த கடலூர் சரக வக்ப் கண்காணிப்பாளர் இன்று கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜிதில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
கோட்டகுப்பம் ஜாமிஆ பள்ளிவாசல் வக்ஃப் நிர்வாக குழு தேர்தலில் வாக்களிக்க உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ஏன பள்ளிவாசலில் ஒட்டி இருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிடவும். இது தற்காலிக பட்டியல் மட்டுமே. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க அல்லது நீக்க இன்னும் வாய்ப்புள்ளது.
வாக்காளர் பட்டியல் மற்றும் படிவங்களின் நகல் பள்ளிவாசலில் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க அங்கேயுள்ள படிவத்தில் எழுதி வக்ப் வாரிய கண்காணிப்பாளர் வசம் கொடுக்கவும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள் 24/11/2021.