
கோட்டக்குப்பம் பள்ளிவாசல் தெரு மற்றும் பெரிய தெரு பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சாக்கடை திட்ட பணிக்காக சாலையின் நடுவே ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன.
சாக்கடை பணிகள் முடிவடைந்த 4 வாரங்களுக்கு பிறகும் தெருக்களில் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றியுள்ள பகுதிகள் சீர் செய்யாமலே அரைகுறையாக அப்படியே விட்டு விட்டுள்ளனர் . மேலும் பள்ளங்களை ஒட்டி குவித்து வைக்கப்படும் மண்ணை சாலையில் இருந்து அப்புறப்படுத்தவில்லை.

கோட்டகுப்பதின் பிரதான பகுதியில் இது போல் மணல் குவிந்திருப்பதால் தொழுகைக்கு வருபவர்களும், திருமண மண்டபத்துக்கு வரும் மக்களும் பெரிதும் சிரமப்படுகிறார்கள்..
சாலைகள் கரடுமுரடாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
தற்போது பெய்யும் மழையால் ஏற்கனவே துர் வாறிய வாய்க்காலில் மணல் சேர்ந்துள்ளது, வரும் நாட்களில் பெய்யும் மழையால் மீதம் இருக்கும் மணலும் கரைந்து சாக்கடையில் சேர்ந்து விடும்.
இதற்காக தான் அதிகாரிகள் காத்துகொண்டு இருக்கிறார்களா என தெரியவில்லை.
சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏன பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.