
கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் 18 குளங்கள், குட்டைகள் கண்டுபிடித்து தர வலியுறுத்தி பாஜக சார்பில் விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான 18 குளங்கள், குட்டைகள் ஆகிய நீர்நிலைகள் அதிகாரிகளின் உடந்தையோடு, ஒரு சிலரின் ஆக்கிரமிப்புகளால் தற்போது காணமால் போய்விட்டது. இதுகுறித்த விவரங்கள் கீழ்க்கண்ட சர்வே எண்ணுடன் இடங்கள் பின்வருமாறு: –
1_219, குட்டை,
2_301/15 , சம்பாகுளம்,
3_307/3, தாமரைகுளம்,
4_307/12 ஆலமரக்குளம்,
5_313/16 குட்டை,
6_315/9, குழிகுட்டை,
7_316, பிள்ளையார் குட்டை,
8_318/4, எடையான்குட்டை,
9_320/7, பெரியான்குட்டை,
10_321/13, தொட்டி மணியம் குட்டை
11_322/14, பெரிய காட்டுக்குட்டை,
12_323/6, குட்டை,
13_333/3 பக்கிரி குட்டை,
14_340/8, குட்டை,
15_341/13, பன்னிக்குட்டை,
16_389/21 குட்டை,
17_ 389/28, குட்டை,
18_333/6 குப்புசாமி குட்டை,
எனவே மேற்கண்ட குளங்கள், குட்டைகள் ஆகிய நீர்நிலைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வானூர் வட்டாட்சியர் கண்டுபிடித்து தர வலியுறுத்தியும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானூர் ஒன்றிய பாஜக சார்பில் கட்சி தலைமையிடம் உரிய அனுமதி பெற்று கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அவசியம் திராளாக பங்கேற்க வேண்டும்.