
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரும் நவ.1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையொட்டி, நவ.1-ம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுதவிர, நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய 4 நாட்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இந்த காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம்உள்ளிட்ட பணிகளை மக்கள் மேற்கொள்ளலாம். அப்போது பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 2022 ஜன.5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.