புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதி முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, பள்ளிகளை திறப்பது குறித்து புதுச்சேரி அரசு நடத்திய ஆலோசனையில், நவம்பர் 4 தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்ததும், வருகிற 8ஆம் தேதி முதல் பள்ளிகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.