
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு, புதிய நோயாளிகள் பதிவு போன்றவற்றுக்கு அதிக காலதாமதம் ஏற்படுவதால் நோயாளிகளும், உறவினர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் பதிவு நேரங்களை மற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
புதிதாக ஜிப்மரில் பதிவு செய்யும் நேரம் காலை 8 முதல் 11 மணியாக இருந்தது. இப்போது காலை 7 முதல் 10.30 மணிவரை புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுவார்கள். தொடர் சிகிச்சைக்கு காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இருந்த பதிவு காலை 7 முதல் மதியம் 12 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோல சிறப்பு பிரிவு பதிவு நேரம் மதியம் 12.30 மணியிலிருந்து 3 மணியாக இருந்தது. தற்போது இந்த நேரம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.