
அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தனி விமானங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15 முதல் புதிய விசா வழங்கப்படும் என்று உள்துறை அறிவித்துள்ளது. நவம்பர் 15 முதல் பிற விமானங்களிலும் சுற்றுலா பயணிகள் வர உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அவ்வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சார்ட்டர் விமானங்கள் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், அவர்களை அழைத்து வரும் விமான நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.