
இ-சேவை மையங்களில் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை வருகிற அக்டோபா் 1-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளா் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளா்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
வருகிற அக். 1 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த வாய்ப்பை வாக்காளா்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.