
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 299 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய பாஜக அரசுடன் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.
புதுச்சேரியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து 27-ம் தேதி நடைபெறும் பந்த் போராட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபடுவது என அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.