
கடந்த மாதங்களில் கோட்டக்குப்பதில் பல பகுதியில் புதிய ரோடு போட்டு, அதை உடைத்து சைடு வாய்க்கால் போட்டது கோட்டக்குப்பம் பேரூராட்சி.
அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பின்னர் கோட்டக்குப்பம் பேரூராட்சி நகராட்சி அந்தஸ்து பெற்றதன் பயனாக பள்ளிவாசல் தெருவில் சைடு வாய்க்கால் வேலை நடைபெறுகிறது.


இந்த தெருவில் இருக்கும் நியாய விலை கடை அருகே இருந்த சைடு வாய்க்கால் சிமெண்ட் பலகையை புதிதாக மே மாதம் தான் கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் மாற்றினார்கள். அப்போது அருகே இருந்த வீட்டினர் தங்கள் கை காசை போட்டு வீட்டு முன்பு படிக்கட்டுகளை சரிபடுத்தினர்.


பேரூராட்சியாக இருந்த கோட்டக்குப்பம் நகராட்சி ஆனா 4 மாதத்தில் மீண்டும் அதே வாய்க்காலை உடைத்து மீண்டும் புதிதாக பனி செயகிறார்கள். வீடுகளின் படிக்கட்டுகளை இடித்து வைத்துள்ளனர். அரசாங்கத்திடம் பணம் இருப்பதால் அடிக்கடி உடைத்து விளையாடலாம். கொரோனா பெருந்தொற்றில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் இந்த நேரத்தில் மீண்டும் இடித்த தங்கள் வீட்டு படிக்கட்டுகளை சரிப்படுத்த பெரிதும் கஷ்டப்படுவார்கள்.


தொலைநோக்கு பார்வை இல்லாமல் பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் இந்த வாய்க்காலை கட்டின அரசு, எத்தனை தடவை சரிபடுத்தினாலும் மீண்டும் மீண்டும் மண் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கும் நிலை தான் ஏற்படும்.
அரசு மாறினாலும் காட்சி மட்டும் மாறவில்லை.