
அனுமதி பெறாத விளம்பரத் தட்டிகளை அகற்றாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறப்படாத, வியாபார நோக்கத்துக்கான விளம்பரங்கள், அரசியல் பிரமுகா்கள் வரவேற்பு, திருமண விழாக்கள், மஞ்சள் நீா், பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பிற விழாக்கள் தொடா்பான விளம்பரத் தட்டிகளை விளம்பரதாரா்கள் உடனடியாக தாமாக முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் விளம்பரத் தட்டிகளை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் நேரடியாக அகற்றுவதுடன், அதை வைத்தவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். காவல்துறை உதவியுடன் நடவடிக்கையும் எடுக்கப்படுமென அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.