கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் சார்பாக நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம் அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். அதை தொடர்ந்து ஜாமி அத்துர் ரப்பானியா அரபி கல்லூரியில் அதன் செயலாளர் ஹாஜி முஹமது முஸ்தபா, அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். மேலும் இஷாத்துல் இஸ்லாம் வளாகத்தில் ஜாமி ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் ஹாஜி இஹ்சானுல்லாஹ் கொடியேற்றி வைத்தார்கள். இந்த நிகழ்வில் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
