
மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்திட மின்னகம் என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. தமிழகத்தில் 3 கோடியே 10 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் மின்சாரம் தடை பட்டாலோ, புதிய மின் இணைப்பு பெறவோ, மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்களுக்கோ மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்வதே பலரின் வழக்கமாக உள்ளது. இப்படி புகார் அளிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள மின் நுகர்வோர் சேவை மையம் தான் மின்னகம்.
இச்சேவை மையத்தின் மூலம் மின் தடை குறித்த புகார், புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், மின் அழுத்த ஏற்ற இறக்கம், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், மின் மாற்றிகள் பழுது உள்ளிட்ட அனைத்து புகார்களையும் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்கிறார் மின்துறை அமைச்சர்.
24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் முன் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவிக்கும் புகார்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட பகுதி மின்வாரிய அலுவலகத்தில் உடனடியாக நடவடிக்கை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
New service In Amod
LikeLike