
மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஏ.அன்சாரி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் விதொச சேகர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், வட்ட தலைவர் வி.குமார், வட்ட செயலாளர் கே.ஹலில் பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை செயலாளர் அசரப் அலி, வட்ட குழு முபாரக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.