
கொரொனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவிய நிலையில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரொனா தடுப்பு பணிகள் இரு மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் தொற்று கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் நேற்று தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது. இதில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு போன்றவை மட்டும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கோட்டகுப்பதில் இருக்கும் அனைத்தும் பள்ளிவாசல்களும் தயார் செய்யும் பணியானது நடைபெற்று வருகின்றது…
கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் நாளை காலை பாஜ்ர் தொழுகையில் இருந்து வழக்கமான தொழுகைக்கு மீண்டும் திறக்கப்படுகிறது ..