
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படாது என புதுச்சேரி நகராட்சி எச்சரித்தது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிகம் செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் வருகிற சனிக்கிழமைக்குள் (ஜூன் 26) தவறாது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அதற்கான ஆதாரத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.
புதுவை மாநில செயற்குழுவின் ஆணைப்படி, கரோனா தடுப்பூசி செலுத்தாமல் வணிகம் செய்யும் உரிமையாளா்கள், வியாபாரிகள், ஊழியா்களின் கடைகள் அடுத்த வாரம் முதல் திறக்க அனுமதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.