
கோட்டக்குப்பம் மக்களே! மின்சார ரீடிங் எடுக்கவில்லை என அசால்ட்டாக இருக்க வேண்டாம்! கொஞ்சம் அலார்ட்டாக இருங்க!!
கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதத்திற்கான மின் அளவீடு எடுக்க வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டகுப்பதிலும் வீடுகள் தோறும் மின்வாரிய ஊழியர்கள் அளவீடு எடுக்கவில்லை. அவ்வாறு அளவீடு எடுக்காத வீடுகள், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் எவ்வளவு மின் கட்டணம் வந்ததோ அதை தற்போது கட்ட வேண்டும். அடுத்தமுறை விடுபட்ட 2 மாதங்கள் உட்பட 4 மாதங்களுக்கு மின் கணக்கீடு எடுக்கப்பட்டு அதில் தற்போது கட்டிய மின் கட்டணம் கழிக்கப்படும் என மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டக்குப்பம் மக்கள் மின் கட்டண விவகாரத்தில் அலார்ட்டாக இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.