
ஐரோப்பா, மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் 30 வது நோன்பை நிறைவு செய்தன.
இதனை தொடர்ந்து இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பிறையை தேடப்பட்டது. ஷவ்வால் பிறை தென்பட்ட காரணத்தால் பிரான்ஸ் போன்ற ஐரோப்பா நாடுகளிலும் மற்றும் சவூதி, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை (13/05/2021 – வியாழக்கிழமை ) ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ஷவ்வால் பிறை தென்படாததால் 14/5/2021 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! புண்ணியங்களின் பூக்காலமான புனித ரமதான் மாதத்தில் நோன்பு நோற்று, தவறாமல் திருக்குர்ஆன் ஓதி,
இரவுகளில் நின்று வணங்கி, இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டு,
இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ‘ஸகாத்தையும்’ நிறைவேற்றி,
படைத்த இறைவனுக்காகப் பசித்து, தனித்து, விழித்திருந்து
புனித ரமதான மாதம் முடிந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான் ஈகைத் திருநாளாகக் (‘ஈத் அல் ஃபித்ர்’) கொண்டாடுகிறோம். இதையேதான் நோன்புப் பெருநாள் என்றும் அழைக்கிறோம்.“இறைவனே பெரியவன்… இறைவனே பெரியவன்… அவனைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. இறைவனே பெரியவன்.அனைத்துப் புகழும் இறைவனுக்கே.” (அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்…லாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்..வலில்லாஹில் ஹம்து) பெருநாள் தொழுகை நடைபெறுவதற்கு முன்பாக பள்ளிவாசலில் முழங்கப்படும் இறைத்துதி இது.இவ்வாறு இறைவனைப் போற்றித் துதிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ரமலான் முப்பது நாள் நோன்புகளை யார் முழுமையாக நிறைவேற்றினார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியும் குதூகலமும் பொங்கும் நாள் ஈகைத் திருநாள்.
“ஆஹா…முப்பது நாள் நோன்பிருந்தோம். பசிதாகத்தைப் பொறுத்துக் கொண்டோம். வழிபாடுகளில் ஈடுபட்டோம். வேதத்தை ஓதினோம். இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினோம். தான தர்மங்கள் செய்தோம்…” புனித ரமதான மாதம் முடிந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான் ஈகைத் திருநாளாகக் (‘ஈத் அல் ஃபித்ர்’) கொண்டாடுகிறோம். இதையேதான் நோன்புப் பெருநாள் என்றும் அழைக்கிறோம்.
இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களி ரமதான் பண்டிகை’, மற்றும் தியாகத் திருநாள் ‘பக்ரீத் பண்டிகை’ என ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுகிறது.
ரமலான் நோன்பின் நிறைவாக ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் நண்பர்கள் இணையதள வாசகர்களுக்கும், உறவினர்கள் அனைவருக்கும் கோட்டக்குப்பம் இணையத்தளம் சார்பாக மனமார்ந்த இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த புனிதமான ஈகை திருநாள் உங்கள் அனைவரின் வாழ்வில் அமைதியையும் சுபீட்சத்தையும் அள்ளித்தரும் நாளாக அமையட்டும். ஈத் முபாரக்!