
சவுதி உட்பட பல நாடுகளில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்
துபாய், சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பா நாடுகளின் பிறைபார்க்கும் குழுக்கள் இச்செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும்கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது. இன்று வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்ததால் இன்றிரவு முதல் சஹர் வைத்து நோன்பை தொடங்குகின்றனர்.
தமிழகத்தில் இன்று வளர் பிறை தெரியாததால் நாளை மறுநாள் நோன்பு தொடங்க வாய்ப்புள்ளது.
இப்புனித மிகு ரமலான் மாதத்தில் பாவச்செயல்களை விட்டு விலகி நோன்பு நோற்று, ஜகாத் சதக்காக்கள் செய்து, நற்காரியங்கள் நிரப்பி இறை பொருத்தத்தையும், இறையன்பையும் நம் அனைவரும் பெற்றிட கோட்டக்குப்பம் செய்திகள் இணையத்தளம் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.