தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதியில் கோட்டகுப்பதில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதால் கோட்டக்குப்பம் பகுதியில் தேர்தல் களை கட்டி வருகிறது.