
கோட்டக்குப்பம் பகுதியின் நீண்டநாள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோட்டக்குப்பம் மக்களின் நீண்ட நாள் நிறைவேற்றாமல் இருக்கும்
பிரதான கோரிக்கைகள் சில
- மழைக்காலங்களில் பரக்கத் நகர் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
- பெருகிவிட்ட வாகனப் போக்குவரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மகாத்மா காந்தி ரோடு போக்குவரத்து நெரிசல்களுக்குத் தீர்வு காண வேண்டும்.
- கோட்டக்குப்பம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அதன்முலம் இங்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும்.
- சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏதாவது கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்றால் MLA இடத்தை தேடிக் கண்டு பிடித்து அங்கு சென்று கொடுக்க வேண்டியுள்ளது, அதனால் கோட்டக்குப்பம் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறக்க வேண்டும்.
- பழுதடைந்த அரசு கிளை நூலக கட்டிடத்தை புதுப்பித்து கட்டவேண்டும்.
- கோட்டக்குப்பம் புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- கோட்டக்குப்பத்தை வருவாய் வட்டமாக மாற்றி வட்டத் தலைநகராமாக அறிவிக்க வேண்டும்.
- கோட்டக்குப்பம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வானுரிலிருந்து இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்கு, ஒரு மணி நேரமாகிறது. அதற்குள் தீயில் பொருட்கள் எரிந்து நாசமாகிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டால் விரைவில் தீ அணைக்க கோட்டகுப்பதில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
- கோட்டக்குப்பம் பகுதியில் 50 படுக்கை வசதி கொண்ட ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைக்க வேண்டும்
- கோட்டக்குப்பம் தொடக்கப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்
- நிரந்தர மின்தடையை போக்க கோட்டக்குப்பத்தில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் கோட்டக்குப்பம் பொது மக்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளாக முறையான மின் வினியோகம் இல்லை. குறைந்த மின் அழுத்தத்தால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இடம் தேர்வு செய்யும் பணி, இன்றும் தொடர்கிறது. மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு, துணை மின்நிலைய அமைக்க வேண்டும்.
- புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து சுத்தமான, சுவையான குடிநீர்…..
- அணைத்து தெருக்களுக்கு சாக்கடை வசதி …..
- பேருந்து நிறுத்தம் நிழல் குடை
- மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு
- அணைத்து தெருக்களுக்கும் குப்பை தொட்டி
- சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்கா…….
பல ஆண்டுகளாக நாமும் நம்முடைய கோரிக்கையை வைத்துவருகிறோம், இதில் எந்த கோரிக்கை இதுவரை நிறைவேறி இருக்கிறது என்று மக்கள் நீங்களே கீழே இருக்கும் லிங்கை அழுத்தி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…
நான் periyamudaliyar chavadi 100/1/A சவுத் திவான் கந்தப்ப நகர் என்ற இடத்தில் வசிக்கிறேன். என் வீட்டிற்கு பக்கத்தில் காலி மனை உள்ளது. அங்கேதான் தெருவில் உள்ள அத்தனை பேரும் குப்பையை கொட்டுகிறார்கள். எனவே தெருமுனையில் ஒரு குப்பைத் தொட்டியை வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
LikeLike