
விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று வானூர். இது தனித்தொகுதியாகும். விழுப்புரம் மாவட்ட எல்லையோரத்தில் புதுவை மாநிலத்துக்கு அருகில் அமைந்துள்ள பகுதி என்பதால் நில அமைப்பில் வானூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமானவை புதுவை மாநிலத்துக்கு இடையிடையே இருக்கின்றன. அதனால், எது தமிழ்நாடு, எது புதுவை என கணிப்பதில் கூட அங்கு புதிதாக செல்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும். அந்த அளவுக்கு புதுவையுடன் பின்னிப்பிணைந்த தொகுதியாக இருந்து வருகிறது.
இத்தொகுதியில்தான் ஆரோவில் சர்வேதேச நகரம்,பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலும், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலும் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.
கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் இத்தொகுதியின் பரப்பாகும்.
இத்தொகுதியில் கோட்டக்குப்பம், கலிங்கமலை, வழுதாவூர், , பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், , கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர், மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள்,
சமூகம்: இந்த தொகுதியில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர்.
வன்னியர்கள் 30 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 25 சதவீதம் உள்ளனர். உடையார், ரெட்டியார் உள்ளிட்ட பிற சமுகத்தினர் 45 சதவீத்தினர் உள்ளனர். அதேபோன்று இங்கு இஸ்லாமியர்கள், மீனவர்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.
தொகுதி பிரச்சினைகள்
இங்கு ஏராளமான கல்குவாரிகள் இருப்பதால் அசுத்தமான காற்றையே இப்பகுதி மக்கள் சுவாசிக்கின்றனர். அருகில் புதுச்சேரி மாநிலம் இருப்பதால் பெரும்பாலும் வேலை இல்லா திண்டாட்டம் குறைவாகவே உள்ளது.
நிறைவேறியதும், நிறைவேறாததும்: வானூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்று அப்பகுதி மக்களின் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோன்று அப்பகுதியில் குடிநீர் பிரச்னை பெறும் தலைவலியாகவே இருந்து வருகிறது. இதனைத் தீர்க்கவும் கடல் நீரை குடிநீராக்கும் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வானூர் ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால் அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை தீரும் எனலாம். ஆனால், இந்தத் திட்டம் எப்போது நிறைவேறும் என்பது கேள்விக்குறியே. அதனால், மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகவே எழுந்துள்ளது.
அதே நேரத்தில் அப்பகுதி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. கடல் சீற்றம் காரணமாக, பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தொடர்ந்து வருகிறது. இதனைத் தடுக்க தூண்டில் வளைவுத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோன்று, “வானூர்’ வட்டத் தலைமையிடமாகவும், ஒன்றியத் தலைமையிடமாகவும் இருந்தாலும் வளர்ச்சி மட்டும் இங்கு எட்டாக்கனியாகவே உள்ளது. வானூரைவிட திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பெரும் வளர்ச்சியை எட்டி வருகிறது. கோட்டக்குப்பமும் வளர்ந்து வருகிறது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.
பிரச்னைகள்: மேலும், கோட்டக்குப்பத்தை வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. புதுச்சேரியை ஒட்டிய பெரிய ஊராக கோட்டக்குப்பம் இருந்து வரும் நிலையில் அங்கிருந்து வானூருக்குச் சென்று வருவது சிரமமாக உள்ளது. ஆகவே, வளர்ந்து வரும் நகரத்தை வட்டத் தலைநகராமாக மாற்ற வேண்டும்.
பெயரளவில் செயல்பட்டு வரும் வானூர் வட்ட மருத்துவமனையை முழு கட்டமைப்புகளுடன், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமித்து மேம்படுத்த வேண்டும். கோட்டக்குப்பம் பகுதியில் அரசு சார்பில் அவசர கால விபத்து சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளன. ஏனெனில், இப்பகுதி மக்கள் விபத்து, உடல் நலக்குறைவு உள்பட எல்லா பிரச்னைகளுக்கும் புதுச்சேரியில் உள்ள மருத்துவனைகளை நாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், கோட்டக்குப்பம்-மரக்காணம் இடையே பெரிய மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
மேலும், புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சமின்றி வந்து செல்ல ஏதுவாக சட்டம் – ஒழுக்கு பராமரிப்பை சீர்படுத்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகவே உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கொலைக் களமாகவும், ரௌடிகளின் புகழிடமாகவும் வானூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் உள்ளன.
குறிப்பாக, கோட்டக்குப்பம், கண்டமங்கலம் போன்ற பகுதிகளில் கொலை, அடிதடி, கட்டப் பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. இதுபோன்ற எதிர்மறை செயல்பாடுகளை கட்டுப்படுத்த திறமையான காவல்துறை அதிகாரிகளை நியமித்து, இங்கு சட்டம் ஒழுங்கை பராமரித்தால்தான் இப்பகுதி மக்கள் நிம்மதி இருக்க முடியும் என்கின்றனர்.
வானூர் பகுதியில் ஏராளமான தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களில் அளவுக்கு அதிமாக தண்ணீரை உறிஞ்சுவதாகவும், விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதனைக் கண்காணித்து விதிமீறல்களை தடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
இதுவரை நடந்த வானூர்(தனி) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
வருடம் | நிலை | வேட்பாளர் பெயர் | கட்சி | பெற்ற வாக்குகள் | மொத்த வாக்குகள் |
---|---|---|---|---|---|
2011 | வெற்றி பெற்றவர் | ஜானகிராமன் | அதிமுக | 88,834 | 1,58,671 |
2 வது இடம் | புஷ்பராஜ் | திமுக | 63,696 | ||
2006 | வெற்றி பெற்றவர் | கணபதி | அதிமுக | 59,978 | 1,40,886 |
2 வது இடம் | சவுந்தரராஜன் | பாமக | 55,942 | ||
2001 | வெற்றி பெற்றவர் | கணபதி | அதிமுக | 68,421 | 1,22,958 |
2 வது இடம் | மைதிலி | திமுக | 47,072 | ||
1996 | வெற்றி பெற்றவர் | மாரிமுத்து | திமுக | 58,966 | 1,24,343 |
2 வது இடம் | ராஜேந்திரன் | அதிமுக | 35,024 | ||
1991 | வெற்றி பெற்றவர் | ஆறுமுகம் | அதிமுக | 60,128 | 1,13,116 |
2 வது இடம் | ஜெயசீலன் | திமுக | 23,659 | ||
1989 | வெற்றி பெற்றவர் | மாரிமுத்து | திமுக | 42,825 | 91,054 |
2 வது இடம் | கிருஷ்ணன் | காங். | 20,813 | ||
1984 | வெற்றி பெற்றவர் | ராமஜெயம் | அதிமுக | 58,196 | 96,319 |
2 வது இடம் | பூபாலன் | திமுக | 31,980 | ||
1980 | வெற்றி பெற்றவர் | முத்துவேல் | திமுக | 38,883 | 74,770 |
2 வது இடம் | ராமஜெயம் | அதிமுக | 33,635 | ||
1977 | வெற்றி பெற்றவர் | பரமசிவம் | திமுக | 21,557 | 63,965 |
2 வது இடம் | பூபாலன் | அதிமுக | 19,584 | ||
1971 | வெற்றி பெற்றவர் | முத்துவேல் | திமுக | 34,121 | |
2 வது இடம் | வெங்கடாச்சலம் | என்.சி.ஓ. | 19,306 | ||
1967 | வெற்றி பெற்றவர் | பாலகிருஷ்ணன் | திமுக | 30,023 |
இத்தொகுதியில் 7 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்1, 10,930
பெண்1,14, 767
மூன்றாம் பாலினத்தவர்16
மொத்த வாக்காளர்கள்2,25, 713
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
