
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் கல்யாணராமனை கண்டித்து இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கல்யாணராமனை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்..
