பழைமை முதல் புதுமை வரை… புதுச்சேரி சந்தை! – எல்லா பொருள்களும் இங்கே..!


பழைமை முதல் புதுமை வரை… புதுச்சேரி சந்தை! – எல்லா பொருள்களும் இங்கே..!

புதுச்சேரியின் 500 ஆண்டுக் கால அடையாளமே வணி கம்தான். 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக் காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ் சுக்காரர்கள் என ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு வரத் தொடங்கினாலும், 1521-ல் முதலில் கால்பதித்து வணிக வளாகங்களை அமைத்தது போர்த்துக்கீசியர்கள் தாம்.

1699-ல் ரிஸ்விக் ஒப்பந்தத்தின்படி, டச்சுக்காரர்களிடம் 16,000 பகோடா நாணயங்களைக் கொடுத்து துறைமுக நகரமாக விளங்கிய புதுச் சேரியைப் பெற்ற பிரெஞ்சுக்காரர் கள், மூன்று பெரிய பஞ்சாலைகளை அமைத்து துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தனர். 1954-ம் ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது வரை ஏறத்தாழ 280 ஆண்டு கள் துணி ஏற்றுமதி வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தது புதுச்சேரி.

பழைமை முதல் புதுமை வரை… புதுச்சேரி சந்தை! - எல்லா பொருள்களும் இங்கே..!

300 ஆண்டு பழைமையான நேரு வீதி…

300 ஆண்டுகளுக்கு முன்பு சிறு வியாபாரிகளுக்கான திறந்தவெளிச் சந்தையாக விளங்கிய இடம்தான், தற்போது நேருவீதி மற்றும் காந்திவீதி சந்திப்பில் சுமார் 600 கடைகளுடன் பெரிய மார்க்கெட்டாக இயங்கி வருகிறது. புதுச்சேரியின் முன்னாள் மேயர் மற்றும் முதல்வரான ‘எதுவார் குபேர்’ பெயரில் இயங்கிவரும் இந்த மார்க்கெட் புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தின்கீழ் வருகிறது. புதுச்சேரி மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வது இந்த மார்க்கெட்தான்.

பழைமை முதல் புதுமை வரை… புதுச்சேரி சந்தை! - எல்லா பொருள்களும் இங்கே..!

புதுச்சேரி பெரிய மார்க்கெட் மளிகை மற்றும் நவதானிய வியா பாரிகள் சங்கத்தின் செயலாளர் சுந்தரிடம் பேசினோம். “ஒருகாலத்தில் புதுச்சேரி மட்டுமல்லாமல், விழுப் புரம் மற்றும் கடலூர் மாவட்டங் களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இந்த மார்க்கெட்தான் வணிகத்தளமாக இருந்தது. தற்போது அந்தந்தப் பகுதிகளிலேயே மொத்த வியாபாரிகள் உருவாகிவிட்டார்கள் என்றாலும், இன்றும் அந்த மக்கள் இந்த மார்க்கெட்டுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், இங்கு கிடைக்கும் தரமான பொருள்கள். துணிக்கடைகள், மளிகைக்கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், தேங்காய் கடைகள், வெற்றிலைக் கடைகள், கத்தி, அரிவாள்மனை உள்ளிட்ட பொருள்கள் விற்கும் இரும்புக் கடைகள், மிட்டாய்க் கடைகள், ஆட்டுக்கறி கடைகள், கோழிக்கறி கடைகள், பூக்கடைகள், கீரைக் கடைகள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வரிசைகளில் கடைகள் அமைந்திருக்கின்றன. 

பழைமை முதல் புதுமை வரை… புதுச்சேரி சந்தை! - எல்லா பொருள்களும் இங்கே..!

ஊட்டியிலிருந்து கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள், பெல்லாரியில் இருந்து வெங்காயம், சிம்லாவிலிருந்து ஆப்பிள், நாக்பூரிலிருந்து கமலா ஆரஞ்சு என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காய்கறி லோடுகள் அன்றாடம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதால், காய்கறி மொத்த வியாபாரத்தில் இந்த மார்க்கெட்தான் முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரியில் அனைத்துத் தரப்பினருக்கும் இங்கிருந்துதான் காய்கறிகள், பழ வகைகள் சப்ளை செய்யப்படுகின்றன” என்றார்.

எலெக்ட்ரானிக் சாதனங்களும் கிடைக்கும்…

புதுச்சேரி வணிகத்தின் இதயப் பகுதியாக விளங்கும் நேரு வீதியின் இருபுறமும் துணிக்கடைகளே ஆதிக்கம் செலுத்தினாலும், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள் களுக்கும், வீடு மற்றும் விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் மின் மோட்டார் வகைகளுக்கும், பாத்திரக் கடைகளுக்கும் பஞ்சமில்லை.

பெண்கள் தேடிவரும் மார்க்கெட்…

நேரு வீதியில் நான்காவது தலைமுறையாகத் துணி வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் ராம் சில்க்ஸ் கடையின் உரிமையாளர் நடராஜனுடன் பேசினோம். “இந்தியா பிரிட்டிஷ் கட்டுப் பாட்டில் இருந்தபோது புதுச்சேரி பிரெஞ்ச் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 1800 ஆண்டுவாக்கில் மேற்கத்திய உடைகள் இந்தியா வுக்குள் நுழைந்த இடமே புதுச்சேரிதான். அந்த வகையில் மேற்கத்திய உடைகள் இந்தியா முழுவதும் ஊடுருவக் காரணமாக இருந்தது புதுச்சேரி. பிரெஞ்ச் கலாசாரத்தில் கலந்திருக்கும் புதுச்சேரி மக்கள், இங்கிருக்கும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மக்கள், பிரான்ஸிலிருந்து வந்து செல்பவர்கள் என அனைவருமே நவீன வித்தியாசமான உடை களைத்தான் எதிர்பார்க் கின்றனர். அவர்களின் தேவை களைப் பூர்த்தி செய்ய ஆண்டு தோறும் புதுப்புது ஆடைகளை கொள்முதல் செய்கிறோம். தவிர, ஆடை வடிவமைப் பாளரிடம் கூறி பிரத்யேகமாகச் சில உடைகளைத் தயாரித்தும் வாங்குகிறோம்’’ என்றார்.

சுந்தர், நடராஜன்

சுந்தர், நடராஜன்

தங்க நகைகளுக்கு கொசக்கடை வீதி…

கொசக்கடை வீதியில் பெரிய நகைக்கடைகளில் பிளாட்டினம் தொடங்கி வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கலாம். மேலும், நெல்லுமண்டி சந்தில் இருக்கும் நகைக்கடைகள் முழுவதும் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பங் களின் தேர்வாக இருக்கும். 

ஏற்றுமதியாகும் ஊதுவத்தி…

புதுச்சேரியில் தயாரிக்கப்படும் தோல் மற்றும் கைவினைப் பொருள்கள் பிரான்ஸ், அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. அதேபோல, ஆரோவில் பகுதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஊதுவத்தி, பெரிய பெரிய வாசனை மெழுகுவர்த்திகள், கற்களால் தயாரிக்கப்படும் ஆபரணங்கள், பிரம்பு, மரத்தால் தயாரிக்கப்படும் கலைப்பொருள்கள், சுடுமண்ணால் செய்யப்படும் கலைப் பொருள்கள், கை களால் தயாரிக்கப் பட்ட பேப்பர்கள் உள்ளிட்டவற்றை நேரு வீதி மற்றும் செஞ்சி சாலைகளில் வாங்கலாம். 

கோட்டக்குப்பமும் சின்ன முதலியார் சாவடியும்…

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் கலை நயத்துடன் வடிவமைக்கப் பட்ட பழமையான கதவுகள், மரங்களால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணாடிகள், நாற் காலிகள், பெட்டிகள் போன்ற அரிய பொருள்களைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோட்டக்குப்பம், சின்ன முதலியார் சாவடியில் இருக்கும் கடைகளில் மிகக் குறைவான விலைகளில் அள்ளிச் செல்லலாம்.

1500 கடைகள் கொண்ட சண்டே மார்க்கெட்… 

புதுச்சேரியின் மிக முக்கிய அடை யாளங்களில் ஒன்று சண்டே மார்க்கெட். சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள மகாத்மா காந்தி வீதியில் இயங்கும் இந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே இயங்கும். 1974-ம் ஆண்டு எண்ணிக்கையில் 40 கடைகளுடன் தொடங்கிய இச்சந்தை தற்போது 1,500 கடைகளாக விரிவடைந்து பிரபலமாக இயங்கி வருகிறது. புதுச்சேரி மட்டு மல்லாமல் விழுப்புரம், சேலம், சென்னை, திருச்சி, திண்டிவனம், பெங்களூரு என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் சண்டே மார்க் கெட்டில் கடைகள் வைக் கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை சண்டே மார்க்கெட் களைகட்டும். 500 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போனும் 50 ரூபாய்க்கு ஐ-போனுக்கான சார்ஜரும் இங்கு கிடைக்கும். அனைத்து நாட்டின் தபால் தலைகள், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் இங்குக் கொட்டிக் கிடக்கும் என்பதால் அவற்றைச் சேகரிப்பவர் களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். 200 முதல் 500 வருடங்கள் பழைமையான பொருள் களைக்கூட இங்கே சர்வ சாதாரணமாகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் வெளிநாட்டவரும், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இந்த வீதியில் நடந்து கொண்டிருப்பார்கள். மிகவும் பழைமையான புத்தகங்கள், அச்சில் இல்லாத புத்தகங்கள் மற்றும் மருத்துவம், பொறியியல் சார்ந்த புத்தகங்களைப் பாதி விலைக்கு வாங்கலாம். புதுச்சேரியில் உள்ள சந்தைகள் அனைத்தும் உயிர்ப்புடன் உள்ளன! 

வாரச் சந்தையில் ஆடு, மாடு, கோழிகள்..!

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மதகடிப்பட்டில் செவ்வாய்க் கிழமை நடைபெறும் வாரச் சந்தையில் ஆடு, மாடு, கோழிகள் மற்றும் வாத்துகள் தொடங்கி மீன், கருவாடு, காய்கறிகள் போன்றவையும், எலிப்பொறி, சொரடு, பெரிய, சிறிய வகைக் கரண்டிகள், மாடுகளுக்கான கயிறுகள், கழுத்துப் பட்டைகள், மணிகள், கொம்புச் சலங்கைகள் எனச் சகலவிதமான பொருள்களும் கொட்டிக்கிடக்கின்றன. சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகளில் இருக்கும் மக்களும் ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். அன்றைய ஒருநாள் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்கின்றனர் வியாபாரிகள். அதேபோல, புதுச்சேரி- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் முள்ளோடை என்ற பகுதியில் வியாழக்கிழமைதோறும் சந்தை நடைபெறுகிறது.

நன்றி : விகடன்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s