புயல் உருவானால் என்னென்ன பெயர்கள் வைக்கப்படலாம்?


கடந்த சில நாட்களாக புயல் பற்றிய செய்திகளை காணும் போது ‘நிசர்கா’ ‘கதி’ ‘நிவர்’ என்ற பெயர்கள் அடிபட்டிருக்கும். இவைகள் தான் புயலுக்கு பெயர்களாக வைத்திருக்கின்றனர். இந்த பெயரை யார் வைத்தது? புதிதாக புயல் உருவானால் என்னென்ன பெயர்கள் வைக்கப்படலாம்? உள்ளிட்ட விவரங்கள் பற்றி இங்கே காணலாம்.

🔵 புயல் என்றால் என்ன?

கடற்பரப்பில் 26 டிகிரிக்கு அதிகமான வெப்பநிலை தொடரும் போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. இந்த காற்று மேல்நோக்கி மேல் நோக்கி செல்லும் போது ஏற்கனவே இருந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைகிறது. இதனால் காற்றின் அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று நகர்கிறது. மேலெழும் வெப்பக் காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதனால் தாழ்வு நிலை உண்டாகிறது. இதன் தொடர்ச்சியாக காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனை காற்றழுத்த தாழ்வு நிலை என்று அழைக்கிறோம். பூமியின் சுழற்சியால் காற்று சுழற்சிக்கு உள்ளாகி வேகம் அதிகரிக்கும் போது புயலாக மாறுகிறது.

ஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கனவே முடிவு செய்யப்படும். அதாவது பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் என வெவ்வேறு கடல் பகுதிக்கு தனித்தனி பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

🔵 உலகம் முழுவதும் 7 தட்பவெப்ப மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதனுடன் வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

🔵 மொத்தமுள்ள 13 நாடுகளும் தலா 13 பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் ஒவ்வொரு பெயராக தேர்வு செய்து புயலுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் வைக்கப்பட்ட நிசர்கா என்ற பெயர் வங்கதேசத்திடம் இருந்து எடுக்கப்பட்டது.

🔵 புயலுக்கு பெயரை தேர்வு செய்ய உள்ள நிபந்தனைகள்

ஒவ்வொரு நாடும் தயார் செய்து வைத்துள்ள பெயர்கள் பட்டியல் அகர வரிசைப்படி முறைப்படுத்த வேண்டும். இதில் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஒவ்வொரு பெயரை வரிசையாக தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை வைத்த பெயரை மீண்டும் வைக்கக் கூடாது.

🔵 அதன்படி 2020 ல் புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள பட்டியல் உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

🇧🇩 Bangladesh

  1. Nisarga 2.Biparjoy 3.Arnab 4.Upakul 5.Barshon 6.Rajani 7.Nishith 8.Urmi 9.Meghala 10.Samiron 11.Pratikul 12.Sarobor 13.Mahanisha

🇮🇳 India

1.Gati 2.Tej 3.Murasu 4.Aag 5.Vyom 6.Jhar 7.Probaho 8.Neer 9.Prabhanjan 10.Ghurni 11.Ambud 12.Jaladhi 13.Vega

🇮🇷 Iran

1.Nivar 2.Hamoon 3.Akvan 4.Sepand 5.Booran 6.Anahita 7.Azar 8.Pooyan 9.Arsham 10.Hengame 11.Savas 12.Tahamtan 13.Toofan

🇲🇻 Maldives

1.Burevi 2.Midhili 3.Kaani 4.Odi 5.Kenau 6.Endheri 7.Riyau 8.Guruva 9.Kurangi 10.Kuredhi 11.Horangu 12.Thundi 13.Faana

🇲🇲 Myanmar

1.Tauktae 2.Michaung 3.Ngamann 4.Kyarthit 5.Sapakyee 6.Wetwun 7.Mwaihout 8.Kywe 9.Pinku 10.Yinkaung 11.Linyone 12.Kyeekan 13.Bautphat

🇴🇲 Oman

1.Yaas 2.Remal 3.Sail 4.Naseem 5.Muzn 6.Sadeem 7.Dima 8.Manjour 9.Rukam 10.Watad 11.Al-jarz 12.Rabab 13.Raad

🇵🇰 Pakistan

1.Gulab 2.Asna 3.Sahab 4.Afshan 5.Manahil 6.Shujana 7.Parwaz 8.Zannata 9.Sarsar 10.Badban 11.Sarrab 12.Gulnar 13.Waseq

🇶🇦 Qatar

1.Shaheen 2.Dana 3.Lulu 4.Mouj 5.Suhail 6.Sadaf 7.Reem 8.Rayhan 9.Anbar 10.Oud 11.Bahar 12.Seef 13.Fanar

🇸🇦 Saudi Arabia

1.Jawad 2.Fengal 3.Ghazeer 4.Asif 5.Sidrah 6.Hareed 7.Faid 8.Kaseer 9.Nakheel 10.Haboob 11.Bareq 12.Alreem 13.Wabil

🇱🇰 Sri Lanka

1.Asani 2.Shakhti 3.Gigum 4.Gagana 5.Verambha 6.Garjana 7.Neeba 8.Ninnada 9.Viduli 10.Ogha 11.Salitha 12.Rivi 13.Rudu

🇹🇭 Thailand

1.Sitrang 2.Montha 3.Thianyot 4.Bulan 5.Phutala 6.Aiyara 7.Saming 8.Kraison 9.Matcha 10.Mahingsa 11.Phraewa 12.Asuri 13.Thara

🇦🇪 United Arab Emirates

1.Mandous 2.Senyar 3.Afoor 4.Nahhaam 5.Quffal 6.Daaman 7.Deem 8.Gargoor 9.Khubb 10.Degl 11.Athmad 12.Boom 13.Safar

🇾🇪 Yemen

1.Mocha 2.Ditwah 3.Diksam 4.Sira 5.Bakhur 6.Ghwyzi 7.Hawf 8.Balhaf 9.Brom 10.Shuqra 11.Fartak 12.Darsah 13.Samhah

NivarCyclone #நிவர்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s