
கோட்டக்குப்பத்தில் இன்று பேரூராட்சி திடலில் ஆக்கிரமித்து வைத்துள்ள பால் பூத்தை அகற்ற கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அனைத்து கட்சிகளின் சார்பாக நடைபெற்றது
இந்த பூத்தை அகற்ற மனிதநேய மக்கள் கட்சி கோட்டக்குப்பம் நகரம் சார்பாக கடந்த 12-12-2019 அன்று திரு செயல் அலுவலர் அவர்களிடம் நேரில் மனு வழங்கப்பட்டது. இதற்க்கு மின் இனைப்பும் வழங்ககூடாது என்று மின் வாரியத்திற்க்கும் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத பேரூராட்சியின் செயல் அலுவலர் அனுமதி அளித்துள்ளார்கள்.
இதை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இனியும் பேரூராட்சி நிர்வாகம் அகற்றவில்லையென்றால் போராட்டம் தொடரும்.