
கோட்டக்குப்பத்தில் நாளை(13-09-2020, ஞாயிற்றுக்கிழமை) சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம், தைக்க திடல் அங்கன்வாடியில் காலை 10 மணி முதல் முற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் கொரோனா நோய் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு, சுவை தெரியாமல், மூச்சு திணறல், வாசனை தெரியாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும் கொரோனா நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம்.
எனவே மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.