

கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் நாட்டாண்மைக்கார தெருவில் புதிய ரோடு போடுவதற்காக பழைய ரோட்டை கீறி எடுத்தனர். பின்னர் தாருடன் ஜல்லி போட தாமதமானதால் அப்படியே விட்டு விட்டார்கள்.
இதனால் பழைய ரோட்டின் ஜல்லி கற்களால் தெரு முழுவதும் சிதறி கிடக்கிறது.
இந்த கற்கள் வாகன டயர்களை பதம் பார்ப்பதுடன், ஆட்களும் சறுக்கி விழுந்து பாதிப்புள்ளாகின்றனர்.
பொறுத்து பார்த்த மக்கள் ரோட்டுக்கு நடுவில் ஒத்தையடி பாதை அமைத்து விட்டார்கள்.
கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் புதிய ரோடு போடும்வரை, சிதறி கிடக்கும் கற்களை சுத்தப்படுத்தவேண்டும். மேலும் விரைவாக தார் சாலை அமைக்கவேண்டும்.