
கோட்டக்குப்பம் பேரூராட்சி சமீபத்தில் பழையபட்டின பாதையில் புதிதாக ரோடு அமைக்கும் பனி ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் பழைய ரோட்டை உடைத்து அதன் மேல் தான் ரோடு போடுவதாக சொல்லிவந்தார்கள். சில இயங்கங்களுக்கும் பேரூராட்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆனால் கோட்டக்குப்பம் பேரூராட்சி இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வழக்கம் போல் பழைய ரோட்டை விட அதிகம் உயரம் அமைந்து புது ரோடு போட்டு விட்டார்கள். இதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது, கூடவே 150 வருட பாரம்பரிய பள்ளிவாசலும் ரோடு மட்டத்துக்கு வந்து விட்டது. 50 வருடங்களுக்கு முன்பு பள்ளிவாசல் உள்ளே செல்ல இரண்டு படிக்கட்டு ஏறி செல்லவேண்டும்.
வருங்காலத்தில் அதிக மலை பொழிந்தால் அதன் தண்ணீரும் கூடவே வரும் சாக்கடை சகதியும் புனிதமான பள்ளிவாசல் உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய வீடுகள் அனைத்தும் பள்ளமாகி மழைநீர் வீட்டுக்குள் புகுந்து விடும்.
புது ரோடு போட்டால் சந்தோச படும் மக்கள், இந்த புதிய ரோட்டை கஷ்டமாக பார்த்து செல்கிறார்கள்.
கோட்டக்குப்பம் பேரூராட்சி துரிதமாக செயல்பட்டு இப்போது தயாராக இருக்கும் ரோடு மேல் தார் ஊற்றி புது ரோடு அமைக்கும் முன்பு, முன்பு இருந்த பழைய ரோடு உயரத்தை தாண்டாமல் அமைக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.