
நமதூரில் மட்டுமில்லாமல் அணைத்து ஊர்களிலும் காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்படும் மக்கள் கிளீனிக்குகளுக்கு சென்று உடனடி தீர்வுக்கு ஊசி போடுமாறு மருத்துவர்களிடம் கேட்கின்றனர். அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நோயாளிகளின் உடல் நலன், நாள்பட்ட வியாதிகள் போன்றவற்றை அறிந்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை அவர்கள் தாங்கக் கூடிய மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால் உடனடி தீர்வுக்காக நோயாளிகள் ஊசியை எடுத்துக்கொள்கின்றனர்.
இதுகுறித்து அனுபவம் வாய்ந்த மருத்துவர் தெரிவிக்கையில் “இந்த சூழலில் காய்ச்சல், உடல் வலிக்கு ஊசி போட்டுக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. இதய நோயாளிகள், சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் இதுபோன்ற ஊசிகளை போட்டு கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு வேளை கொரொனோ வைரஸ் தொற்று இருந்தால் இந்த ஊசி வைரசின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். இதனால் அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமடையக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே நோயாளிகள் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முறையாக பின்பற்றாமல் உடனடி நிவாரணத்துக்காக இதுபோன்ற ஊசிகளை நோயாளிகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

