
Credit : The Vikatan

காற்றிலுள்ள சிறிய துகள்களில் உள்ள கோவிட்-19 வைரஸ், மக்கள் அதைச் சுவாசிக்க நேரும்போதும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ், தொற்றுள்ள ஒரு நபரிடமிருந்து மற்றவர்களுக்கு அவரின் மூக்கு, வாயிலிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகள் வழியாகப் பரவும் என்று அறிவுறுத்திவருகிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், ‘நீர்த்திவலைகள் மட்டுமல்ல, அந்த நீர்த்திவலைகளில்உள்ள சிறிய துகள்கள் காற்றின் மூலமாகவும் தொற்றைப் பரப்புகின்றன’ என சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் நியூயார்க் டைம்ஸிடம் கூறும்போது, “உலக சுகாதார நிறுவனம் கூறுவதைப்போல, கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டவரின் நீர்த்திவலைகள் மூலமாக மட்டுமே மற்றவர்களுக்குப் பரவுவதில்லை. காற்றிலுள்ள சிறிய துகள்களில் உள்ள கோவிட்-19 வைரஸ், மக்கள் அதை சுவாசிக்க நேரும்போதும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த ஆராய்ச்சியை 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் தக்க ஆதாரத்துடன் ஆய்வில் கண்டுபிடித்துள்ளோம். இதை உலக சுகாதார அமைப்புக்குத் தெரியப்படுத்தி உள்ளோம். எனவே அது, கோவிட்-19 வைரஸ் காற்றில் பரவும் நோய் என்பதை ஏற்றுக்கொண்டு, தனது கொரோனா பாதுகாப்பு ஆலோசனைகளை அதற்குத் தகுந்தவாறு மாற்றி வெளியிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Coronapixabay.com
இந்தச் சர்ச்சை குறித்து லண்டன் செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் எழுப்பிய கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு உரிய பதில் அளிக்கவில்லை. அதன் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் முதன்மை மருத்துவர் பெனடெட்டா அலெக்ரான்சி, “கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடிய நோய் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லை, அது இப்போதுவரை தெளிவாக நிரூபிக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.