
இந்திய சிறுவன் பிரித்விக் சின்ஹாவின் மருத்துவ சிகிச்சைக்காக அமீரக மன்னர் கடிதம்…!!!
சிறுவீரனே சிரித்துக் கொண்டே இரு..!
இப்படிக்கு : ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம்..!
அமீரகத்தின் துபையில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த 15 வயதான பிரித்விக் சின்ஹா என்ற மாணவனுக்கு சிறுநீரக குறைபாட்டினால், அவனது பெற்றோர் பிறரின் உதவியை எதிர்பார்த்திருந்த நிலையில், அவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தானே செய்வதாக அமீரகத்தின் பிரதமரும், துபை ஆட்சியாளருமாகிய ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அச்சிறுவனுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்..!

பிரித்விக்கின் இரத்த மாதிரியை கொண்டிருக்கும் அவரது தந்தை பாஸ்கர் சின்ஹா தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில், கொரோனாவினால் தடைபட்ட விமான சேவையால் தோஹாவிற்கு சென்ற அவர் அமீரகம் வர இயலாத சூழல் ஏற்பட்டடிருந்தது..!
மருத்துவ உதவிக்காக பிரித்விக்கின் பெற்றோரின் நண்பர்கள் துபை அல் ஜலீலா ஃபவுண்டேசனை தொடர்பு கொண்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ஷேக் முஹம்மது அவர்களிடமிருந்து பூக்கள் மற்றும் ஐபேட்(iPad) உடன் ஒரு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது..!

அந்த கடிதத்தில் “ என் அன்பான பிரித்விக், நீ இங்கே வீட்டில்(அமீரகத்தில்) இருக்கிறாய்.நீ பாதுகாப்பான கரங்களில் இருக்கிறாய்.உன்னை நல் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் படி இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன் என்பதை நினைவூட்டுவதற்காக ஒரு சிறிய செயல் இது… சிறுவீரனே சிரித்துக் கொண்டே இரு…!” இப்படிக்கு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது….