
நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட்போனில் உள்ள 20 ஆப்களால் ஆபத்து இருப்பதாக செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அவை என்னவென்று பார்போம்…
நாம் தினமும் நேரத்திற்கு சாப்பிடுகிறோமோ இல்லையோ என்று தெரியாது, ஆனால் நம் கையில் எப்போதும் ஸ்மார்ட்போன் இருந்து கொண்டே இருக்கும்.
தூங்கும்போதும் கூட பலருக்கு மொபைல் பக்கத்தில் இருந்தால் தான் தூக்கமே வரும். புதிதாக மார்கெட்டில் அறிமுகமான மொபைல்களை வாங்கி பயன்படுத்துவதை விட நாம் பயன்படுத்தும் ஆப்களில் தான் ஆபத்து அதிகமாக உள்ளது.
அதனால் முடிந்த வரை நம்மை தற்காத்து கொள்வது அவசியம். ப்ளே ஸ்டோரில் அதிகமாக விதவிதமான செயலிகள் அறிமுகபடுத்தபடுகின்றன. அந்த செயலி அனைத்தும் நம்மை கவரும் நோக்கிலேயே இருக்கும்.
ஆனால் அது நமக்கு அது தேவையா பாதுகாப்பானதா என்று யோசிப்பதே இல்லை. மேலும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் செயலிகளிலும் அதிக ஆபத்து நிறைந்திருக்கிறது என்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே சில செயலிகளால் ஆபத்துகள் இருந்து வந்துள்ளதாகவும், அவை எந்நெந்த செயலி என்று செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் நூற்றுகணக்கான செயலிகள் இருந்தாலும், குறிப்பிட்ட சில செயலிகளை அறிவித்துள்ளது.
அதில், பேஸ்புக், இன்ஸ்டா கிராம், யாகூபிரவுசர், மெசஞ்சர், சேர் இட் இவை இல்லாத ஸ்மார்ட்போன் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இதில் தான் அதிக ஆபத்து இருப்பதாக செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த செயலிகள் மூலம் தனி நபர் தகவலுக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். யாஹூ செயலியில் 10,000,000 பதிவிறக்கங்களையும், மோட்டோ வாய்ஸ் செயலியில் 10,000,000 பதிவிறக்கங்களையும், லைவ் எக்ஸ் லைவ் செயலியில் 50,000,000 பதிவிறக்கங்களையும் கொண்டுள்ளதாக தெரிவித்தது.
இந்த செயலிகளிலும் அதிகப்படியான ஆபத்துகள் இருப்பதை நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த அனைத்து செயலியிலும், vulnerable library என்று அழைக்கக் கூடிய அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர் இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், மொபைல் லெகன்ட், ஸ்முலே, ஜூக்ஸ் மியூஸிக் இந்த செயலிகளும் அதிகப்படியாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இதுவும் ஆபத்தான செயலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வீ சேட், அலி எக்ஸ்பிரஸ் வீடியோ எம்பி2 கன்வெர்டர், இந்த ஆப்கள் அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலிகள் என்றும், லஜாடா, விவா வீடியோ, ரெட் ரிகா, டியூன் இன் இந்த செயலிகள் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இவைகளும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், எனவே இந்த செயலிகளை அன்இன்ஸ்டால் செய்வது நல்லது என செக் பாயண்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவையில்லாத ஆப் ஐ தரவிறக்கம் செய்து
உங்களுக்கு நீங்களே #ஆப்பு வைத்து கொள்ளவேண்டாம்…..